Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/சூரியன் எழும் முன் நீ எழு!

சூரியன் எழும் முன் நீ எழு!

சூரியன் எழும் முன் நீ எழு!

சூரியன் எழும் முன் நீ எழு!

ADDED : ஏப் 15, 2012 09:04 AM


Google News
Latest Tamil News
* நான் பெரிய பணக்காரன் என்று ஒரு போதும் பெருமை பேசாதே. நட்சத்திரங்களின் பிரகாசத்தின் முன், மின்மினிப்பூச்சியின் கர்வம் காணாமல் போய் விடும். இயற்கையின் பேராற்றலின் முன், நம்முடைய செல்வமும் செல்வாக்கும் மிக அற்பமானவை.

* நீ இறைவனைத் தேட விரும்பினால், முதலில் மனிதனைத் தேடு. தெய்வீகசக்தி மற்ற எல்லா பொருளைக் காட்டிலும் மனிதனிடமே விசேஷமாக இருக்கிறது.

* சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, அன்றாடப் பணிகளைத் தொடங்குபவன் வாழ்வில் வெற்றி பெறுவது போல, சிறுவயதில் இருந்தே ஆன்மிக நாட்டத்தை வளர்த்துக் கொள்பவன் இறைவனை அடைவது உறுதி.

* உலக ஆசைகளின் நடுவில் இருந்து கொண்டே மனதைக் கட்டுப்படுத்த பழகியவனே உண்மையில் வீரன்.

* மனத்தூய்மை பெற்றவனின் வாய் வார்த்தைகள் மந்திரம் போல காந்தசக்தி பெற்றுவிடும்.

- ராமகிருஷ்ணர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us